உர இறக்குமதிக்காக 55 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பயிர்ச்செய்கை யுத்தம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை 2022-2023 விவசாய பருவத்திற்கான யூரியாவை வாங்குவதற்காக 55 மில்லியன் டொலர் கடனுக்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சர்களின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.