இன்று காலை 6.30 மணி முதல் நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப் பட்டு வருகிறது.
மின்சார சபை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை இடைநிறுத்திய போதிலும் இன்று காலை 5 மணி முதல் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
அடுத்த சில மணித்தியாலங்களில் முழுமையாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும்,
எனவும் ஜனாதிபதி இன்று சந்திப்பதாக உறுதியளித்ததன் பேரிலேயே வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் CEB தொழிற்சங்கப் பிரதிநிதி ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
அதேவேளையில் நாட்டில் இன்று 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


