தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியால் பல நிறுவனங்கள் கடினமான காலங்களை எதிர்கொண்டாலும், தேசிய இரத்த மாற்று சேவைக்கு இரத்த விநியோகச் சங்கிலி உள்ளது.
ஆனால் அடுத்த சில வாரங்களில், பெரும் நெருக்கடிக்கு மத்தியில் செயல்பட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ‘உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை’ கருத்தில் கொண்டு, தேசிய இரத்த மாற்று சேவையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், அதன் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.
மேலும், கொவிட்-19 தொற்று நிலைமையின் போது சேவை அச்சுறுத்தலை எதிர்கொண்ட போதிலும், இரத்த தானம் செய்வதை மட்டுப்படுத்துமாறு எந்தவொரு வைத்தியசாலை அதிகாரிகளிடமோ அல்லது விசேட வைத்தியர்களிடமோ கோரிக்கை விடுக்கப்படவில்லை.
தொற்றுநோய்களின் போது அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடியான சூழ்நிலையை யாருக்கும், ஊடகங்களுக்கு கூட வெளிப்படுத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், நன்கொடையாளர்களும், ஏற்பாட்டாளர்களும் தாராள மனப்பான்மையுடன் சேவையில் குறைவின்றி தொடர பெரும் பங்களிப்பை வழங்கினார்கள்.
‘எங்கள் விநியோகச் சங்கிலி மேலாண்மை, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரத் துறையால் முன்வைக்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றில் எங்களுக்கு சில சிக்கல்கள் இருந்தன.
எனினும் நாங்கள் இப்போது வரை தொடர்ச்சியான சேவையை வழங்க முடிந்தது,’ என்று டாக்டர் எதிரிசிங்க கூறினார்.
எங்கள் வரையறுக்கப்பட்ட வளங்களை பராமரிக்க கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். பெரும்பாலான விலையுயர்ந்த உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சேவையை நிர்வகிப்பதற்கான உயர் மட்ட நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் எங்களால் அதனைத் தொடர முடியாது எனவும் டாக்டர் எதிரிசிங்க மேலும் தெரிவித்தார்.