ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, போராட்டங்களைத் தொடங்குவதற்கு கட்சி தங்களால் முடிந்ததைச் செய்யும் என்று கூறினார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுடன் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.