லிட்ரோ நிறுவனத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு இந்த ஆண்டு வெளியேறிய மூன்று தலைவர்களுமே பொறுப்பு என லிட்ரோ நிறுவனத்தின் நிகழ்ச்சி மற்றும் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்தார்.
அதேநேரம், புதிய தலைவராக எரிவாயு வர்த்தகம் தொடர்பான அறிவுள்ள ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வருட ஆரம்பத்தில் பதவி விலகிய அனில் கொஸ்வத்த, தாம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திஷார ஜயசிங்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரின் குறுகிய கால ஆட்சியே தற்போதைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
அதிகாரிகள் இப்போது இடமாற்றத் தலைவர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கக்கூடிய பாரிய அனுபவம் வாய்ந்த தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறிய கொலம்பெட்டிகே, இலாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்த லிட்ரோ தற்போது ரூ.10 மில்லியன் கடன் வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.