அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது!

Date:

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அத்துடன் 25 மில்லியன் ரூபா மற்றும் 1 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடாக செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் ஃபரீக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் 15 குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றினால் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை இன்று விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் ரணதுங்கவின் மனைவி மொரீன் ரணதுங்க அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

13வது குற்றச்சாட்டில் அமைச்சர் ரணதுங்க குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...