ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதாக விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தாம் அறிவித்துள்ளதாகவும் தாம் யாருடனும் கோபம் கொள்ளவில்லை எனவும் கொள்கையொன்றின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து சுயேச்சையாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என்றும் அடிப்படையில் அரசாங்கம் மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.