இந்திய மக்களால் வழங்கப்பட்ட 14,700 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் பவுடர் மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கிய 3 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்களை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று இலங்கைக்கு கையளித்தார்.
தமிழ்நாடு அரசின் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் மருந்துகள் என்ற பெரிய உறுதிப்பாட்டின் கீழ் இது இரண்டாவது பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றதாக என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதாரம் தொடர்பான பல நிறுவனங்களுக்கு மருந்துகள் வழங்குதல், இலங்கை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம், தேவைப்படும் பிரிவினருக்கு உலர் உணவுகள் வழங்குதல் போன்ற வடிவங்களில் இந்திய அரசு இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த நிவாரணப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்த நிவாரண உதவி பொருட்களின் பொறுமதி மூன்று பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.