இவ்வருடம் சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு ஒரு மில்லியன் ஹஜ் யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைய 8 இலட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டு யாத்திரிகர்களும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு யாத்திரிகர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
யாத்திரிகர்கள் 65 வயதுக்குட்பட்டவர்களாகவும் கொவிட் 19 தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களாகவும் அவர்கள் நாட்டினை விட்டும் வெளியறும் முன்பு கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் இல்லை எ.பி.சி.ஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு ஐரேப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த யாத்திரிகர்கள் இவ்வருட ஹஜ் கடமைக்கான பதவிகளை மின்னுவியல் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.