இன்று நள்ளிரவு முதல் தொலைபேசி, இணையக் கட்டணங்கள் உயர்வு!

Date:

இன்று (ஜூன் 3) நள்ளிரவு முதல் வட், மற்றும் தொலைத்தொடர்பு வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பிரதிப் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதற்கு ஏற்றாற் போல் தொலைபேசி கட்டணங்களும் உயர்வடையவுள்ளன.

அதன்படி தொலைத்தொடர்பு வரி 11.25வீதத்தில் 15வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பு கூட்டு வரி (வட்) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தொலைபேசி கட்டணமும் உயரும் என்றார்.

அதன்படி, மொத்த வரி விகிதத்தில் 22.6 வீதமாக இருந்த வரி விகிதம் 31.43வீதமாக உயரும் என்றார்.

இணைய சேவைக் கட்டணங்கள் மீதான பெறுமதி சேர் வரி அதிகரிப்பும் திருத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 10.2வீதமாக முதல் 14.29வீதம் வரை வரி உயரும் என்றார்.

நாட்டிலுள்ள முன்னணி தொலைபேசி சேவை வழங்குனர்கள் உரிய வரித் திருத்தங்களுக்கு அமைவாக தமது அழைப்புக் கட்டணங்களையும் இணைய சேவைக் கட்டணங்களையும் அதிகரிப்பதுடன், இது தொடர்பில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...