இன்று மாலை ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

அதற்கமைய இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதுடன் அதன் பிறகு கூட்டம் நடைபெறும்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...