காய்கறி அரிசி பொதிகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களையும் தற்போதைய விலையில் இருந்து 10 வீதம் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், மரக்கறி, மீன் மற்றும் கோழிக்கறி அரிசிப் பொதிகள் மற்றும் பொரித்த அரிசி மற்றும் கொட்டு ஆகியவற்றின் விலைகள் 10 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், பிளேன் டீ, பால் தேநீர் விலை உயர்வு அமுலுக்கு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.