முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஜூன் 9) உத்தரவிட்டுள்ளது.
அவரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அதுவரை நிறைவேற்ற வேண்டாம் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ரிட் மனு மீதான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நிலுவையில் இருக்கும் வரை அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.