இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர் அப்துல்லாஹ் அல்-ஸனூஸி காலமானார்!

Date:

முன்னாள் இலங்கைக்கான குவைத் தூதுவர் (2002-2005) அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி அவர்கள் கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை காலமானார்.

2004 ஆம் ஆண்டின் மிகப் பெரிய இயற்கை அழிவாகக் கருதப்படும் ஆழிப்பேரலையின் அனர்த்தங்களின் போது அன்றைய இலங்கைக்கான குவைத் தூதுவராக மர்ஹும்  அல்-ஸனூஸி கடமையாற்றியதோடு, சுனாமி அனர்த்த நிவரான உதவிகளின் போது அவர் மனிதாபிமான உதவிகளின் முன்னோடியாக திகழ்ந்தார்கள்.

இலங்கை-குவைத் நட்புறவு என்பது 50 ஆண்டுகால நீண்ட வராற்றைக் கொண்டதாகும்.

இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பமனாது.

இரு நாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1971 பெப்ரவரி 19ஆம் திகதி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டு இலங்கையில் குவைத் தூதரகம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைக்கான மூன்றாவது குவைத் தூதுவராக அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி 2002ஆம் ஆண்டு நியமனம் பெற்று 2005 வரை சேவையில் இருந்தார்.

அவருடைய பணிக்காலத்தில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது.

அன்று தொடக்கம் தனது சேவைக்காலம் முடியும் வரை வழமையான இரு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவதற்கு அப்பால் இலங்கை அரசுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் கூடிய கரிசனை செலுத்தி வந்தார்.

மர்ஹும் அப்துல்லாஹ் அல்-ஸனூஸி அவர்கள் இலங்கை வாழ் மக்களின் உள்ளங்களை வென்றவர்.

அவருடைய காலத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்படப்ட இலங்கை மக்களின் துயரங்களை நீக்குவதில் மிகுநந்த கரிசனையோடு அருஞ்சேவை செய்தவர்.’

மனிதாபிமான உதவிகளின் தந்தையாக மதிக்கப்பட்டவர். அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த முன்னாள் தூவர் ஸனூஸி அவர்கள் நேற்று புதன்கிழமை மரணித்தார்கள்.

அவருடைய ஜனாஸா நேற்று குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...