இலங்கை- இந்திய மகளிர் அணி கிரிக்கெட்: இலங்கைக்கு 139 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Date:

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (23) தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க முடியும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 3-வது ஓவரில் 17 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை பறிக்கொடுத்தது.

6 பந்துகளை சந்தித்த மந்தனா 1 ஒட்டம் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த மேகனா வந்த முதல் பந்திலேயே ஓட்டம் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நெருக்கடியான நிலையில் சவாலி வர்மாவுடன் கேப்டன் கவூர் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். 31 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த சவாலி வர்மா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே கவூர் வெளியேறினார். இதனால் இந்திய அணி 10.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி 36 ஓட்டங்களும், தீப்தி வர்மா 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கும்

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...