நாட்டிற்கு கிடைக்கப்பெறும் கடனை நம்ப முடியாது என்பதால் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள இன்று முதல் பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துவது முக்கியம் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அனைவரும் இறங்கினால் மட்டுமே இந்த சவாலை சமாளிக்க முடியும், விளை நிலம் இருப்பதால் இந்தச் சவாலை இலகுவாகச் சமாளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவர்கூட பட்டினி கிடக்காத வகையில் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.
நாட்டில் கிடைக்கும் அரிசியின் அளவு குறித்து நன்கு அறிந்திருப்பதால், உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறையை வகுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.