ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு எதிராக இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
விமானப்படை புலனாய்வுப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தரிந்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் செயல் என்று அவர் கூறினார்.