எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரச சேவையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
போக்குவரத்து பிரச்சினைகள், மின்சார துண்டிப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சு தெரிவிக்கின்றது.