எரிபொருள் இல்லாமல் ஆம்புலன்ஸ்கள் சேவைகள் பாதிப்பு: எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

Date:

ஆம்புலன்ஸ், மருந்துகளை ஏற்றிச்செல்லும் வாகனம், ஜெனரேட்டர் போன்றவற்றுக்கு தேவையான எரிபொருளை பல மருத்துவமனைகளில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸுகளுக்கு எரிபொருள் நிரப்பாவிட்டால், ஆபத்தான நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து வசதிகளுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாமல் இருந்தால், எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நாட்டில் மருந்துகள் அல்லது மருத்துவமனைகள் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர், 15 நோயாளர் காவு வண்டிகளில் போதியளவு எரிபொருள்  இல்லை என தெரிவித்தார்.

இரண்டு மருந்து ஏற்றுச்செல்லும் லொறிகள், நான்கு கெப் வண்டிகள் மற்றும் ஒரு வேன் எரிபொருளின்றி நிறுத்தப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளிலும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பிரச்சினை மற்றும் பணியாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை காரணமாக தனியார் அம்புலன்ஸ் சேவைகளும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...