மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் கட்டார் நாட்டுக்கு பயணமாகவுள்ளனர்.
எரிபொருள் மற்றும் வேலை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளன.
கட்டார் அரசிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடலுக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்கவும் ரஷ்யா செல்லவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.