அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் வெள்ளிக்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல மருத்துவர்களும், மற்ற ஊழியர்களும், தற்போது சைக்கிள் அல்லது பொதுப் போக்குவரத்து மூலம் வேலைக்குச் செல்கின்றதாகவும் சுட்டிக்காட்டிக்கட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு வந்து நோயாளர்களின் பராமரிப்பு சேவைகளை வழங்க முடியாது என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், அவசர சிகிச்சைக்காக மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வருகின்றனர்