எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Date:

கிடைக்கப்பெற்ற மற்றும் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்த சில நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேநேரம், நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருள் இருப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கடன் கடிதங்களை வழங்குவதற்கான திட்டங்களை வழங்குவதற்கும் வசதியாக செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று (17) முற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது விநியோகஸ்தர்களுக்கு நீண்ட கால எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை பயன்படுத்தி பொலிஸாரின் மேற்பார்வையில் தனியார் மற்றும் சுற்றுலா பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

தற்போதுள்ள எரிவாயு கையிருப்புகளை முறையாக விநியோகித்தல் மற்றும் போதியளவு இருப்புக்களை விரைவாக ஒழுங்குபடுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...