‘எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்’: எரிசக்தி அமைச்சர்

Date:

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு போதிய வெளிநாட்டு கையிருப்பு நாட்டில் இல்லாத காரணத்தினால், குறிப்பிட்ட முன்னுரிமையின் கீழ் வெளியிட  எரிபொருளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படவுள்ளதுடன், அரச பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைக்கப்பட்ட வாகனங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படும்.

மேலும், மீனவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் உள்ள 22 மீன்பிடி துறைமுகங்கள் மூலம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விடுவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் 160 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...