எரிபொருள் விலை மேலும் அதிகரிப்பால் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (26), ஏற்கனவே, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டில் பாரிய தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், திடீரென எரிபொருள் விலையேற்றத்தினால் பொருளாதார மையம் மட்டுமன்றி மரக்கறிச் செய்கைகளும் செயலிழந்து போகும் அபாயம் அதிகம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் மரக்கறிகள் கொண்டு வரப்படுவதுடன், அவற்றை கொள்வனவு செய்ய நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வர்த்தகர்கள் வருகை தருகின்றனர்.
ஆனால், எரிபொருள் விலையேற்றத்தால் வியாபாரம் நிலைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.