எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இன்று (27) நள்ளிரவு முதல் கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து தொழில்துறையினர் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மே மாதம் எரிபொருள் விலை அதிகரித்த போது, தொழிற்சங்கம் கொள்கலன் வாகன கட்டணத்தையும் 35 வீதத்தால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.