எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கட்டண திருத்தத்தின் பிரகாரம் ஜூலை 01 ஆம் திகதி முதல் நாளை முதல் பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.