ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வு ஆரம்பமாகிறது!

Date:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று (13) தொடக்கம் ஜூலை 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் இலங்கை நேரப்படி மாலை 4.20 மணியளவில் அவர் உரையாற்ற உள்ளார்.

மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கு அமைவாக அமைச்சர் பீரிஸின் உரை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சின்ஜியாங், சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளில் விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் வருடாந்த அறிக்கையுடன் அமர்வு ஆரம்பமாகும்.

Popular

More like this
Related

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் விசேட கலந்துரையாடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள்...

வெள்ளத்தால் பன்னல முதியோர் இல்லத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பன்னல, நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த...

முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை குறித்து வெளியான தகவல்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 05...

அனர்த்தங்களை அறிவிக்க விசேட இலக்கங்கள்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமைகள்...