‘கஞ்சா கலந்த பாலுணர்வை ஏற்படுத்தும் ‘மதன மோதக’ எனும் போதைப்பொருள் பாவனை இளைஞர்களிடையே அதிகரிப்பு: சிரேஷ்ட பேராசிரியர்

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலைவாசி உயர்ந்து வருவதால் மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த திரவங்களை இளைஞர்கள் பயன்படுத்துவது ஆபத்தான போக்காக மாறி வருவதாக மனநல அறக்கட்டளையின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியருமான ஞானதாச பெரேரா தெரிவித்தார்.

அதேநேரம், ‘மதன மோதக’ எனும் கஞ்சா கலந்த பாலுணர்வை ஏற்படுத்தும் மலிவு போதைப்பொருளின் மூலம் உட்கொள்ளும் போக்கு இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பல மடங்கு அதிகரித்து வரும் மதுபானங்களின் விலையேற்றம் காரணமாக இளைஞர்கள், குறிப்பாக மூத்த பாடசாலை மாணவர்கள், கடின மதுபானங்களுக்கு மலிவான மாற்றாக இந்த போதையை பயன்படுத்துகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

‘மதன மோதகவை பயன்படுத்துவது ஒருவரின் மன நிலையை கடுமையாக பாதிக்கும், ஏனெனில் அதில் வலுவான போதை உள்ளது.

அது போன்றவற்றுக்கு அடிமையாகிவிடுவது போதைப்பொருள் பாவனையாக அங்கீகரிக்கப்படலாம் மற்றும் பயன்படுத்துபவர்கள் மருத்துவ வசதியில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்,’ என்றார்.

மேலும், இந்த போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் கிடைக்கும் தன்மை இளம் தலைமுறையினரை குறிவைத்து சமூக ஊடகங்கள் மூலம் பரவலாக பரப்பப்படுகிறது.

எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த ‘மதன மோதக’ எனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதையும், பரவுவதையும் முறைப்படுத்தி சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

குறைந்த விலையில் இருப்பதால், இளைஞர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...