கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை ஜூலை 22 ஆம் திகதி திறக்கப்படும்!

Date:

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவ பாதையாத்திரைக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாக கதிர்காமம் கந்தன் ஆலய பஸ்நாயக்க நிலமே திசான் குணசேகர தெரிவித்தார்.

ஜூலை மாதம் 22 ஆம் திகதி திறக்கப்படும் காட்டு பாதை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மீண்டும் பூட்டப்படும்.

இந்த காலப்பகுதிக்குள் பாதயாத்திரீகர்கள் காட்டுப் பாதை வழியாக கதிர்காமத்துக்கு வந்து சேரலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

கதிர்காமம் ஆடிவேல் விழா திருவிழாவிற்கு வடக்கு, கிழக்கு மாகாணத்திலிருந்து இம்முறை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து வரும் யாத்ரீகர்கள் குமண மற்றும் யால வன பூங்காக்களை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 05 வரை அனுமதிக்கப்படுவார்கள்.

கதிர்காமம் தேவாலயத்தின் 2022 எசல திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த பாதயாத்திரை குழுவினர் தற்போது திருகோணமலை மாவட்டத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...