சிறுவர் தொழிலாளர் வழக்கத்தை ஒழிப்பதற்கான வழிகள் என்ன?

Date:

ஒரு சமூகம் தமது சிறார்களை நடத்தும் விதத்தை விட, அச்சமூகத்தின் நிலையை துல்லியமாக வெளிப்படுத்த எதனாலும் முடியாது – நெல்சன் மண்டேலா

குழந்தை தொழிலாளர் வழக்கத்திற்கு எதிரான உலக தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகின்றது.

இது குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக இயக்கத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டின் இதன் கருப்பொருள் இளம் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் வழமையை ஒழிப்பதற்கான உலகளாவிய பங்களிப்பின் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.

குழந்தை தொழிலாளர் பற்றிய சில உண்மைகள்

• 5 முதல் 17 வயதுக்குட்பட்ட 218 மில்லியன் குழந்தைகள் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பபடுகின்றனர்.

• உலகின் ஏழ்மையான நாடுகளில் நான்கில் ஒரு குழந்தை சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் தொழில்களில் ஈடுபட்டுகின்றது

• பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 152 மில்லியன் சிறார்களில், 88 மில்லியன் சிறுவர்கள் மற்றும் 64 மில்லியன் சிறுமிகள் உள்ளனர்

• ஆப்பிரிக்க கண்டத்தில் ஐந்தில் ஒரு குழந்தை ஏதேனும் ஒரு தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது

சிறார் தொழில் வழமையை ஒழிப்பதற்கான ஐந்து முக்கிய அம்சங்கள்
1 பங்குதாரர்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும்.

குழந்தைகள் தொழில்களில் ஈடுபடுவது அதை அவர்கள் விரும்புவதால் அல்ல. மேலும் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களும் தங்கள் குழந்தை நல்ல விதமாக கல்வி கற்க வேண்டும் என்பதையே அதிகம் விரும்புகிறார்கள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதற்கான காரணம் வறுமையே. ஆனால் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அரசுகள் கட்டுப்பட வேண்டும்.

நிறுவனங்கள் குழந்தைகளுக்குப் பதிலாக பெரியவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். குறிப்பாக நுகர்வோர் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும்.
2 கல்விக்கான வசதியை மேம்படுத்தப்பட வேண்டும்

குழந்தைகள் தொழில்களில் ஈடுபடுவதை விட்டும் தடுத்த உடனேயே அவர்கள் கல்வி கற்க பாடசாலைக்கு சென்று விடுவாரகள் என நாம் எண்ண முடியாது.

சில நாடுகளில் பள்ளிப்படிப்பு மிக விலை உயர்ந்த ஒரு விடயமாக இருக்கும். அல்லது அதன் தரம் மிகவும் மோசமாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதே சிறந்தது என நினைக்கிறார்கள்.

பெரிய மற்றும் சிறு நிறுவனங்கள் தங்கள் பணியிடங்கள், சமூகங்கள், தொழில்கள் அல்லது துறைகளில் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நிலைப்பாட்டை மாற்றலாம்.
3 சிறார்களுக்கு ஆதரவு வழங்குக!

வேலை செய்யும் சிறார்கள் பலவேறு காரணங்களுக்காக அதிகம் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகிறார்கள்.

அனுபவமின்மை – குழந்தைகளுக்கு விவேகமான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் குறைவாகவே உள்ளது.

விடயங்களைச் சிறப்பாகச் செய்வதில் ஆர்வம் – ஒரு கருமத்தில் உள்ள அபாயங்களைப் பற்றி அறியாமல் அதை அதிக சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே சிறார்களிடம் அதிகம் காணப்படும்.

சிறார்கள் பெரியவர்களிடமிருந்து பாதுகாப்பற்ற ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பழக்கங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.

சிறார்கள் சரியான பயிற்சியைப் பெறுவதில்லை மற்றும் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
4 பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகின்றது!

இந்தியாவில் சுமார் 7.8 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போதே ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.

காலப் போக்கில் இது போன்ற சிறார்களில் பலர் பள்ளிப்படிப்பை முற்றிலுமாக கைவிட்டுவிட்டு சிறார் தொழிலாளிற்கு முற்றாக பலியாகிறார்கள்.

இதன் காரணமாக, காலப்போக்கில், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்முறைக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கக்கூடிய முறையாகப் படித்தவர்களை அந்நாடு இழந்து விடும்.
5 நீடித்த வளர்ச்சி இலக்குகள்

2015 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 நீடித்த அபிவிருத்தி இலக்குகளை நாம் ஒன்றிணைந்து பாடுபட்டால் மட்டுமே அடையலாம்.

கடுமையான வறுமை, உறுதியற்ற ஆட்சி மற்றும் ஏனைய நெருக்கடிகள், அத்துடன் இயற்கை பேரழிவுகள் மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றம் தொடர்பான மக்கள் இடப்பெயர்வு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் துணை-சஹாரா ஆப்பிரிக்காவும் ஒன்றாகும்.

இத்தகைய நிலைமைகள் சிறார் தொழில் அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன என்பது வெளிப்படை.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...