கொக்கட்டிச்சோலையில் காணாமல் போன 15 வயது சிறுமி மீட்பு: 42 வயது நபர் கைது!

Date:

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை நேற்று (03) கொக்கட்டிச்சோலையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். இதனையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமி 42 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு சிறுமி வெளியேறி குறித்த நபருடன் புத்தளத்திற்கு சென்று மறைந்திருந்தார்.

இதனையடுத்து சிறுமியுடன் தொலைபேசியில் உறவினர்கள் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்த நிலையில் தலைமறைவாகியிருந்த இருவரும் கொக்கட்டிச்சோலைக்கு வந்த நிலையில் பொலிசார் குறித்த சிறுமியை மீட்டதுடன் அவரை அழைத்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...