கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரை இடையிலான புதிய இன்டர்சிட்டி ரயில் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தை காலை 8.15 மணிக்கு சென்றடையும்.
அத்தோடு கண்டியில் இருந்து இம்மாதம் 14ஆம் திகி மாலை 4.45 மணிக்கு ரயில் புறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.