பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு உடனடி தீர்வு கோரி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் உடடினயாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
‘கோட்டா – ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம’ என்ற தொனிப்பொருளிலே இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி செயலகத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.