பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணியானது தற்போது கொம்பனித்தெரு பகுதியை கடந்து கோட்டையை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி மாணவர்கள் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த பேரணியானது கொழும்பு நகர மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகியதுடன், சிறிதளவு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.