சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் “மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்”

Date:

அட்டுளுகம சிறுமி ஆயிஷாவின் கொலை அதனை அடுத்து ஒரு சில தினங்களில் சாதாரண தரப் பரீட்சை முடிவுக்கு வந்தமை என்பனவற்றை அடுத்து சமூக ஊடகங்களில் ‘மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்’ இன் செயற்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கி விட்டன.

மோட்டிவேஷன் அப்பாச்சிகளுக்கு மேலதிகமாக இப்போது மோட்டிவேஷன் அம்மச்சிகளும் வலம் வரத் தொடங்கி உள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கொரு விடயம் நினைவுக்கு வந்தது. அதை எழுத முன் இந்த மோட்டிவேஷன் பற்றிய ஒரு கருத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மோட்டிவேஷன் என்பது ஒரு தனி நபரை அல்லது குழுவை உற்சாகப்படுத்துவதற்காக அவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக, அவர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் தைரியம் என்பனவற்றை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகும்.

இதில் உரைகள் மட்டுமன்றி பல்வேறு செயற்பாடுகளும் அடங்கி உள்ளன. ஆனால் எம்மவர்கள் பெரிதும் உரைகளாகவே நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.

ர்சுஆ என்று சுறுக்கமாகக் குறிப்பிடப்படுகின்ற (ர்ரஅயn சுநளழரசஉந ஆயயெபநஅநவெ மனித வள முகாதை;துவத்துவம் ) என்ற விசாலமான கற்கையின் ஒரு பகுதி தான் இந்த மோட்டிவேஷன் உரைகளும் செயற்பாடுகளும். இதற்கு அனுபவரீதியான கற்கைகள் மிகவும் அவசியமானவை.

தாங்கள் வாழும் சமூகக் கட்டமைப்பு, தினசரி சந்திக்கின்ற மற்றும் பழகுகின்ற மனிதர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள், அலுவலக சகாக்கள், மேலதிகாரிகள், தமக்கு கீழே பணியாற்றுகின்றவர்கள் என பல்வேறு தரப்பினரை நுணுக்கமாக அவதானித்து அவர்களில் இருந்து சில அனுபவரீதியான கதைகளை உருவாக்குவது மற்றும் ஏற்கனவே அது தொடர்பாக பலரும் கூறி உள்ள பல்வேறு விடயங்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றை இடம், காலம் அறிந்து சரியான இடங்களில் பயன்படுத்துவது, அந்தக் கதைகள் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை கவர்ந்து அவர்களது மனதில் இந்த ஊக்குவிப்பு உதாரணங்களை பதியவைத்தல் என பல அவதானம் மிக்க விடயங்களை உள்ளடக்கியதுதான் இந்த மோட்டிவேஷன் உரைகளும் செயற்பாடுகளும்.

ஆனால் இன்று மோட்டிவேஷன் உரைகள் நிகழ்த்தும் எத்தனைபேருக்கு இத்தகைய ஆழமான அனுபவமும் ஆற்றலும் இருக்கின்றது என்பது ஒரு பெரும் கேள்விக்குறி.

அது அப்படியே இருக்கட்டும். இடம், பொருள் தெரியாமல் ஒருவர் சொன்னதை இன்னொரு இடத்தில் அப்படியே ஒப்புவிக்க முயன்றால் என்ன ஆகும் என்பதை விளக்குவதற்கான ஒரு கதைதான் ஏற்கனவே நான் குறிப்பிட்ட எனது நினைவுக்கு வந்த விடயம். அது இதுதான்

ஒரு கருத்தரங்கில் அனுபவம் மிக்க ஒரு பேச்சாளர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் மிகவும் சுவாரஸ்யமாக அவரது உரையை செவி மடுத்த வண்ணம் இருந்தனர்.

அப்போது அவர் தனது உரையில் ‘என்னுடைய வாழ்நாளில் நான் மிகவும் இன்பமாக, நிம்மதியாக இருந்த காலம் இன்னொருவரின் மனைவியுடன் வாழ்ந்த காலம் தான்’ என்று கூறி ஒரு சில நொடிகள் தனது பேச்சை Pause நிலைக்கு கொண்டு வருகின்றார். அதாவது சற்று இடை நிறுத்துகின்றார்.

இப்போது கூட்டத்தில் ஒரு வகை சலசலப்பு, சஞ்சலம் பல மைண்ட் வொயிஸ்களும் கேட்கத் தொடங்கிவிட்டன. ‘என்னடா இந்த மனிதன் இப்படி சொல்லிவிட்டாரே. இப்படிப் பகிரங்கமாகவா இதை சொல்வது, நல்லவர் என்றல்லவா நினைத்தோம் இப்படிப் பல எண்ணங்கள். பெண்கள் மத்தியில் ஒரு வகை நாணம், முகச்சுளிப்பு என நீளுகின்றது.

பேச்சாளர் ஒரு சில நொடிகளுக்கு மேல் அதை நீடிக்க விடவில்லை. உடனே தனது பாணியில் ‘அந்த இன்னொருவரின் மனைவி எனது தாய்’ என்று கூறினார். இப்போது சபை வழமைக்குத் திரும்பியது.

ஆஹா என்ன ஒரு கருத்து. இதை யாராலும் மறுக்க முடியுமா. எல்லோருடைய தாயும் இன்னொருவருக்கு மனைவி தானே.

அந்த தாயுடன் வாழ்ந்த காலங்களைவிட மகிழ்ச்சியான ஒரு காலத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா? மீண்டும் அவருக்கு வரவேற்பு. இப்படியே நிகழ்வு முடிவடைந்து எல்லோரும் நல்லதோர் உரைக்கு செவிமடுத்த திருப்தியோடு வீடுகளுக்கு சென்றனர்.

அடுத்த காட்சி வீட்டில். கருத்தரங்கில் பங்கேற்ற ஒருவர் தனது வீட்டில் இரவு நேர சாப்பாட்டுக்காக மேசையில் அமர்ந்திருக்கின்றார். சாப்பாடு தயார் நிலையில் இருக்கின்றது.

மனைவி கொதிக்க கொதிக்க கறி சமைத்து குழம்புச் சட்டியோடு சாப்பாட்டு மேசையை நோக்கி மெதுவாக வருகின்றார். மனைவியை ஆச்சரியப்படுத்த நினைத்த நபர் காலையில் தான் கேட்ட விடயத்தை சத்தமாகக் கூறுகின்றார்.

‘என்னுடைய வாழ்நாளில் நான் மிகவும் குதூகலமாக இருந்த நாட்கள் இன்னொருவரின் மனைவியுடன் இருந்த நாட்கள் தான்’ என்று.

அவ்வளவுதான் காட்சி முடிகின்றது. திரையில் தடல் புடல் என்ற சத்தம், முக்கல் முனங்களோடு வெறுமை அடைகின்றது.

அடுத்த காட்சி ஆஸ்பத்திரியில் நண்பர் கண் விழிக்கின்றார். உடம்பெல்லாம் பொக்களங்கள், எரிச்சல், வலி தாங்க முடியவில்லை. முக்கலும் முனங்களுமாக கண் விழித்து பார்க்கின்றார். அருகில் மனைவி சுயரூபத்தோடு நிற்கின்றார். ‘என்னடி செஞ்ச’ வலியோடு அப்பாவித்தனமாகக் கேட்கின்றார்.

‘வேறு என்னத்த செய்ய.. நீங்க என்ன சொன்னீங்க’ ஆத்திரமாக திருப்பிக் கேற்கிறார் மனைவி. நண்பருக்கு அப்போது தான் காட்சி பின்னோக்கி நகர்கின்றது.

கொதிக்க கொதிக்க மனைவி ஆடி அசைந்து சுமந்து வந்த கறிக்குழம்பு சட்டி தன்னை நோக்கிப் பாய்ந்தது அப்போது தான் நினைவுக்கு வருகின்றது. விஷயம் புரிகின்றது. தான் சொல்ல வந்தததை மனைவியிடம் சொல்கிறார். ‘பட் டூ லேட்’.

ஒருவர் சொன்னதை நாம் திருப்பிச் சொல்லும் போது அதற்கு வேறு உத்திகளைக் கையாளலாம். அல்லது சொன்னவரை ஆரம்பத்திலேயே மேற்கோள் காட்டலாம். அதுவே பாதுகாப்பானது.

போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாமல் மற்றவர்களை காப்பி அடிக்க நினைப்பதும் ஆபத்தானது. இடம் பொருள் அறிந்து பேச வேண்டிய அளவு பேச வேண்டும்.

அது மோட்டிவேசன் உரையாகட்டும், சன்மார்க்க போதனை ஆகட்டும் அல்லது வேறுவிதமான ஆலோசனைகள் அறிவுரைகள் ஆகட்டும். எல்லாவற்றுக்கும் ஒரு அளவுண்டு. அதை பேசுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

(மூலம்: நௌஷாட் மொஹிதீன் முகப்புத்தகத்திலிருந்து)

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...