‘ஜனநாயகத்தில் தலையிடக் கூடாது’: ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம்!

Date:

‘ஜனநாயகத்தில் தலையிடக் கூடாது’ என வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கைதுகள், கடத்தல்கள் மற்றும் மிரட்டல்களை உடனடியாக நிறுத்துங்கள், பேச்சு மற்றும் கருத்து உரிமைகளைப் பாதுகாக்கவும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த மௌனப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தின் போது, மனித உரிமைகளை எதிர்ப்பது ஜனநாயகத்தில் தலையிடாது, பல நாட்களாக வரிசையில் நிற்கும் மக்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறையை நிறுத்துங்கள், அமைதியாக போராடுபவர்களை தொடாதீர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் உன பல்வேறு கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

இதேவேளை, இந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு கையளித்தனர்.

இதன்போது, கடிதத்தைப் பெற்றுக் கொண்ட கொழும்பில் உள்ள ஐ.நா. தூதுவர் செர்ஜி சிப்லோவ், இது குறித்து ஐ.நா தலைமையகத்திற்கு விளக்கமளிப்பதாக உறுதியளித்தார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...