ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி – பிரதமர் இருவருக்கும் இடையே சரியான உறவு இல்லை என்றும் அவர் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை வரவழைக்கும் போது பிரதமரும் அவ்வாறே செய்வார் எனவும் சிறிசேன தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் நாடு நாளுக்கு நாள் சீரழிந்து வருவதாகவும் உலகமே நம்பும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.