முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜோன்ஸ்டன் இன்று ஜூன் 8 மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தன்னை கைது செய்வதைத் தடுக்க ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.