ஐந்து வருடங்களாக நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யாமல் கைவிடப்பட்டுள்ள அனைத்து வயல் நிலங்களையும் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு சுவீகரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதேநேரம், தற்போது விவசாயம் செய்யப்படாத நெற்காணிகள் கமநல சேவைகள் திணைக்களத்தினால் இனங்கண்டு காணியற்ற மக்களுக்கு 5 வருடங்களுக்கு பயிர்ச்செய்கைக்காக கையளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வெற்று நிலங்களில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்தவர்களுக்குச் சொந்தமானவை எனவும், ஏனையவை ஆட்கள் பற்றாக்குறையினால் பயிரிடப்படுவதில்லை எனவும், நாடளாவிய ரீதியில் 100,000 ஹெக்டேயருக்கும் அதிகமான தரிசு நிலங்கள் இருப்பது மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.