நபிகள் நாயகம் விவகாரம்: போராட்டம் நடத்தும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை நாடு கடத்தும் குவைத் அரசு!

Date:

நபிகள் நாயகம் சர்ச்சை கருத்துக்கு எதிராக குவைத் நாட்டில் போராட்டம் நடத்தியோரை அந்நாட்டு அரசு சொந்தநாட்டுக்கு அனுப்பி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஈரான், கத்தார், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்திய தூதரகத்திற்கு விளக்கம் கேட்டு மனு அனுப்பின. இந்த மனுக்கு இந்திய தூதரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும் நூபர் சர்மாவை கைது செய்யக்கோரி பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்துடன் வளைகுடா நாடுகளில் சில இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே குவைத் அரசு, நபிகள் நாயகம் விவகாரம் தொடர்பாக குவைத் நாட்டில் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

ஆனால், ஃபஹாஹீல் பகுதியில்  போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் குவைத் அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்து, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டது.

அந்த வகையில் 20-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குவைத் விதிகளின்படி தொழில், படிப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக அந்நாட்டுக்கு வருவோர் போராட்டம் நடத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...