நாளை முதல் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்:கெமுனு விஜேரத்ன

Date:

தனியார் பேருந்துகளின் சேவைகள் நாளை ஜூன் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடி காரணமாக இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 20,000 இலிருந்து 3000 ஆகக் குறைந்துள்ளதுடன், இலங்கைப் போக்குவரத்துச் சபையிடமிருந்து தனியார் பேருந்துகள் டீசலைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் பேருந்துகள் வழமையாக இயங்காது எனவும் கெமுனு உறுதியாகக் கூறினார்.

தனியார் பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்களில் தாங்கிகளை நிரப்ப முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததை அடுத்து பஸ்கள் வழமையாக இயங்கும் என கெமுனு உறுதியளித்துள்ளார்.

மேலும், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் 24 மணி நேர எரிபொருள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தனியார் பேருந்துகளின் சேவைகள் நாளை வழமைக்கு திரும்பினாலும், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...