பேருவளையில் அப்ரார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி கலந்துகொண்டார்.
இதேவேளை பேருவளை நகரபிதா மஸாஹிம் முஹம்மட், அப்ரார் அறக்கட்டளை உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பேருவளை மருதானை பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.