பாணந்துறை பிரதேசத்தில் இன்று (3) நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மத்தத்த தெரிவித்துள்ளார்.
சுடப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவர் பாணந்துறை பின்வத்தையில் வசிக்கும் 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
போதைப்பொருள் தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இதேவேளை, அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகல்ல மருதானை வீதி பகுதியில் இன்று (ஜூன் 3) காலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் லொறியில் வீடுகளுக்குச் சென்று ஆரஞ்சு பழங்களை சேகரித்து விற்பனை செய்து வந்தவர் எனவும், லொறியில் பயணித்த போதே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.