‘பிரதமரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை’:ரணிலுக்கு சாணக்கியன் கடிதம்

Date:

தமது கருத்துக்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்து விளக்கமளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் முரண்பட்ட கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

நாட்டுக்கு பாதகமான விடயங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்ததாக கூறி, அதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கான இரங்கல் விவாதத்தின் போது, பிரதமர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த கருத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

எனினும், பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், பிரதமர் சபைக்கு தவறான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், வன்முறையை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டிப்பதாகவும், வன்முறையைத் தூண்டும் அறிக்கைகளை வெளியிடவில்லை என்றும் சாணக்கியன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தாம், அனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காகவே தாம் குரல் கொடுத்துள்ளதாக அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமது கருத்தை பிரதமர் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், வன்முறைச் செயல்முறைக்கு ஆதரவளிப்பதாக உணர்ந்ததாகவும் சாணக்கியன், தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை எனவும், பொது மக்கள் அத்தகைய குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...