பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிய பிரதமரின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என ஐக்கிய மக்கள சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த பிரதமரின் தலைவிதியையும் இன்னும் சில நாட்களில் ‘கப்புட்டு காக் கப்புட்டு காக்’ என கோசமிடும் குழு தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.
எரிபொருள் விலை 50 வீதம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் என்ன செய்கின்றார் என்பது மர்மமாகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.