எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேக்கரி பொருட்களின் விலை குறித்து விசேட தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
மேலும், பேக்கரி தயாரிப்புகளின் விலையை சம்பந்தப்பட்ட பேக்கரி உற்பத்தியாளர் ஏற்பதோடு விலையை அதிகரிக்க வாய்ப்பு இல்லை எனவும் ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.