நாட்டின் நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்படும் அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (2) தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (2) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.