போதைப்பொருள் பாவனைக்கு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த தினத்தின் முக்கிய கருப்பொருள் ‘சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு போதைப்பொருள் நெருக்கடியை சமாளிப்போம்’ என்பதாகும்.
நம் நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் இளைஞர்களை வாட்டி வதைத்த போதைப்பொருள் ஒவ்வொரு நாட்டிலும் வளர்ச்சிக்கு தடையாக மாறி வருகிறது.
இதே நிலை இலங்கையிலும் பொதுவானது. பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெரும் பணம் சம்பாதிக்க சர்வதேச அளவில் வேலை செய்கிறார்கள்.
அதன்படி நாட்டில் இதுவரை ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலமும், நாட்டின் எதிர்காலத்தை கையில் எடுக்கவிருக்கும் இளம் தலைமுறையினரும் போதைப்பொருள் பாவனையால் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையை இதுவரை எந்த ஆட்சியாளராலும் மாற்ற முடியவில்லை என்பது ஆச்சரியம். தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த நாளுக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் மூலமாக போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான போராட்டத்தினை வலுப்படுத்த வேண்டும் என டிசம்பர் 7, 1987 அன்று முதல் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் 26 ஐ கடைபிடிக்க ஐ.நா முடிவு செய்தது.
போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள் அதனாலேயே உயிரிழக்கின்றனர். இதன் காரணமாக அதை பயன்படுத்துபவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்புகின்றனர்.
ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சமூக களங்கம் போன்ற காரணிகள் அதிலிருந்து அவர்களை மீட்பதை கடினமாக்கியுள்ளது. போதை பொருள் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.