எரிபொருள் தாங்கிகள் கிடைக்கப்பெறும் திகதி உறுதியாகத் தெரியவில்லை எனவும் எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி உக்கிர நிலைமையாக மாறக்கூடுமெனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாமல் போனமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரினார் அமைச்சர்.
பழைய சப்ளையர்கள் முன்வராததால், புதிய விநியோகஸ்தர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் இறக்குமதி பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அமைச்சர், மண்ணெண்ணெய்யை இனி வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.