மல்வானை சொத்து வழக்கில் இருந்து பசில் மற்றும் நடேசன் விடுதலை!

Date:

மல்வான சொத்து வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நடேசன் ஆகியோரை கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (03) விடுதலை செய்துள்ளது.

மல்வான பிரதேசத்தில் மாளிகையொன்றை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாளிகை கட்டப்பட்ட 16 ஏக்கர் நிலத்தை வாங்குவது உட்பட, இந்த விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரல் பசில் ராஜபக்ஷவுக்கு முன்னர் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொம்பே, மல்வான, மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பெரிய வீடு, நீச்சல் தடாகம் மற்றும் பண்ணை ஒன்றை நிர்மாணித்து, அரசாங்க நிதியை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினரான திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்த நிலையில், அன்றைய தினம் நாட்டில் நிலவும் மோசமான நிலைமைகள் காரணமாக உயர்நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் முன்னிலையாகப் போவதில்லை என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...